நடராஜர் சிலை திருடிய இராணுவ சிப்பாய் கைது

0
174

வவுனியா கணதேவி கோவிலில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வவுனியா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார்.

சந்தேகநபர் கோயிலில் இருந்த விக்கிரகத்தை திருடி ஒரு பையில் வைத்து விற்பனை செய்ய வைத்த போது, வவுனியா வேன் தரிப்பிடத்தில் வைத்து சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு வவுனியா தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சிலையின் மதிப்பு 55,000 ரூபாய் என கோவிலின் பூசாரி பொலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here