செந்தில் தொண்டமானுக்கு ஆளுநர் அரியாசனம் உறுதி!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சரும் ஊவா மாகாணத்தின் முன்னாள் பதில் முதலமைச்சருமான முத்துவிநாயகம் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை 17ம் திகதி மூன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அதில் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வடக்கு மாகாண ஆளுநராக அரசு நிர்வாக சேவையில் உள்ள தமிழ் பெண்மணி ஒருவரும் வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...