இராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு, இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து தனுன திலகரட்னவின் 7 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
2015ஆம் ஆண்டு தனுன திலகரத்ன இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கான தடை நீக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் பலமான ஒருவரின் தலையீட்டால் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.