கொழும்பை சுற்றிவளைக்கத் தயாராகும் அநுர அணி

Date:

ஜூன் 09 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகிறது. அதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியானது ஜூன் 08 ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தமது கட்சியின் வேட்பாளர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் செல்லவுள்ளதாகவும் அதன் பின்னர் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின் பின்னர் கொழும்பை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று (27) நடைபெற்ற தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...