மூத்த தொழிற்சங்கவாதி குணசிங்க சூரியப்பெரும காலமானார்

Date:

இலங்கை பொதுத் தோட்ட ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் குணசிங்க சூரியப்பெரும இன்று (30) அதிகாலை காலமானார்.

சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு இறக்கும் போது வயது 77.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா தொகுதியின் முன்னாள் அமைப்பாளரான இவர் கந்தபொல மஹிந்த மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

குணசிங்க சூரியப்பெரும இளைஞனாக இருந்தபோது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வில்லியம் பெர்னாண்டோவுடன் அரசியலில் பிரவேசித்த இவர், மறைந்த விஜய குமாரதுங்கவுடன் இணைந்து மக்கள் கட்சியை உருவாக்க முன்னோடியாக இருந்தார்.

88/89 பயங்கரவாதக் காலத்தில், அன்றைய ஐ.தே.க அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக நுவரெலியாவில் முதலாவது எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்தார்.

மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் நுவரெலியா மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினராகவும் நுவரெலியா பிரதேசத்திற்கு சேவையாற்றிய சமூக சேவையாளரும் ஆவார்.

பல வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்களில் நிறைவேற்றுப் பதவிகளை வகித்த பிரபல சமூக ஆர்வலரான சேன சூரியப்பெருமவின் மூத்த சகோதரர் குணசிங்க சூரியப்பெரும ஆவார்.

குணசிங்க சூரியப்பெருமவின் இறுதி விருப்பத்தின் பிரகாரம் இறுதிக்கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி இன்று (30) மாலை 4 மணியளவில் நுவரெலியா நகரசபை மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...