ஒடிசாவில் ரயில் விபத்து – 233 பேர் உயிரிழப்பு!

0
186

ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் இன்று அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 18-க்கும் அதிகமான ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here