தமது குடும்பத்தில் வேறு எவரும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது மனைவி அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை முழுமையாக மறுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது மனைவி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தை தாம் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றார்.
அவர் எப்போதும் சமூக ஆர்வலராக செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்களின் நலனுக்காக தனது மனைவி எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தானும் தனது மனைவியும் குடும்ப அரசியலில் ஈடுபடவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.