தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

0
192

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் களனி பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாகத் திட்டியதாகவும் அதன் பின்னணியில் இந்த இராஜினாமா இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here