நவகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கி துன்புறுத்திய 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் அறையொன்றில் இருந்த போது உள்நுழைந்த சந்தேகநபர்களால் தாக்கப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இரண்டு பெண்களும் நிர்வாணமாக்கப்பட்டு, பிக்குவும் பெண்களும் தடிகளால் தாக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், குறித்த பிக்கு நவகமுவ பொலிஸாரிடம் தாம் இரண்டு பெண் உறவினர்களுடன் கலந்துரையாடியதாகவும், ஒரு குழுவினர் வந்து தம்மை தாக்கியதாகவும் தெரிவித்தார்.