சாமோதி சந்தீபனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய குழு

0
304

பேராதனை போதனா வைத்தியசாலையில் வைத்து சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்த சாமோதி சந்தீபனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட வைத்தியர்கள் அடங்கிய குழு நாளை பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், விஞ்ஞான விசாரணையின் ஊடாக விசாரணைக்குழு அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட 12 பேர் தற்போது பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சாமோதி சந்தீபனி என்ற யுவதி வயிற்றுப்போக்கு காரணமாக கடந்த திங்கட்கிழமை கட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அன்றிரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது தாய், தந்தை உட்பட உறவினர்கள், அவருக்கு ஊசி போடப்பட்டதால் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here