யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த புஷ்பராஜ் எஷில்நாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் தனது கைத்தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவதற்கு அடிமையாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.