E.P.F, E.T.F நிதிக் கொள்ளை முயற்சியை முறியடிப்போம்! அடிமைத் தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற கட்டாயப்படுத்துவோம்! போன்ற வாசகங்களுடன் பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று (25) பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொழிற்சங்க ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.


















