தேர்தல் நடத்தாமை குறித்து மஹிந்த தேசப்பிரிய கவலை

0
160

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடத்தப்படாமை நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினையாகும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்துகின்றார்.

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இருந்து ஒரு தேர்தலையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக ஜனநாயக தினமான செப்டம்பர் 15ம் திகதிக்கு முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட இரண்டில் ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

மக்கள் கட்டுப்பாட்டின்றி, ஆளுநர்கள், செயலர்கள், கமிஷனர்கள் நடத்தும் இந்த ஆட்சி சட்டவிரோதமானது என பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here