வெஸ்லி கல்லூரிக்கும் சாஹிரா கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பத்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை குரே பார்க் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் பின்னரே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபாஷ் கஹடவலவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.