ரணிலும் சஜித்தும் எனது இரு கண்கள் – ரோஹினி

0
219

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் தமது கண்களைப் போன்றவர்கள் என சமகி ஜன பலவேகயே கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் தனக்கு மிகவும் பிடித்த தலைவர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்தின் காரணமாக மக்களின் கனவு இளவரசனாகும் வாய்ப்பை இழந்ததாகவும் அவ்வாறு செய்யாவிடின் இளவரசராகியிருப்பார் எனவும் ரோஹினி குமாரி கவிரத்ன மேலும் குறிப்பிடுகின்றார்.

இணைய சேனலுடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here