பிரபல ஹோட்டலுக்கு அருகில் மீட்கப்பட்ட 10 கோடி பெறுமதியான கொக்கேய்ன்

0
197

பத்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மூன்று கிலோ கொக்கேய்னுடன் இரண்டு சந்தேகநபர்கள் கொழும்பு ஐந்து பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தரமுல்லையில் ஹோட்டல் ஒன்றினை வைத்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா பயணியாக தனது பயணப்பெட்டியில் கொக்கேய்னை மறைத்து வைத்து இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுங்கச் சோதனைகளைத் தவிர்த்துவிட்டு நாட்டிற்குள் நுழைந்த பிலிப்பைன்ஸ் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, இந்த போதைப்பொருள் கையிருப்பை எடுத்துச் செல்ல வரும் நபரை அடையாளம் காணவும், இலங்கையில் உள்ள அவரது வலையமைப்பை அடையாளம் காணவும் அருகில் உள்ள பகுதியில் பொலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஹோட்டலுக்கு வந்து, போதைப்பொருள் பார்சலைப் பெற்றுக் கொண்டு, அவர் புறப்படும்போது பொலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here