முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் முகநூல் மற்றும் யூடியூப் சேனல்களில் அறிக்கை வெளியிட்ட குற்றச்சாட்டுடன் தொடர்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 06 ஆம் திகதி திறந்த நீதிமன்றில் ஆஜராகுமாறு துமிந்த நாகமுவவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.