பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காப்புறுதி வழங்கும் பொருட்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் நிலையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் உடன் இணைந்து புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பெருந்தோட்ட சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான ஒரு சிறப்புப் பாதுகாப்பு திட்டமாக இது காணப்படுகிறது.
பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் PHDT தலைவர் பரத் அருள்சாமி உள்ளிட்ட பல பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“தோட்டத் தொழிலாளர்களுக்கான காப்பீடு என்பது அவர்களின் வாழ்க்கை எனும் துணியில் நிதிப் பாதுகாப்பை நெசவு செய்யும் பொன்னான நூல்.” என் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.





