ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 17 வருடங்களின் பின்னர் பதக்கம் வென்ற இலங்கை!

Date:

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நதீஷா தில்ஹானி லேகம்கே இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் நதீஷா தில்ஹானி லேகம்கே 61.57 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இவ்வாறு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

2006 இல் சுசந்திகா ஜயசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் 17 வருடங்களின் பின்னர் தடகளப் போட்டியில் இலங்கை பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும் சீனா வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அர்ச்சுனா விளக்கமறியலில்

இலவாலை பொலிஸாரால் இன்று (27) காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

2.5 மில்லியன் டொலர் குறித்து விவாதிக்க அரச தரப்பு மறுப்பு

அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் அளவிலான வெளிநாட்டு கடன் தவணை தொகை...

கொழும்பு மகசின் சிறையில் கைதி அடித்துக் கொலை?

கொழும்பு மகசின் சிறையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு...

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...