இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நேற்றைய தினம் கொழும்பில் சந்தித்தார்.
குறித்த சந்திப்பின் போது,
வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்.
அதே வேளையில் இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியினை ஆளூநர் தெரிவித்தார்.
உயர் ஸ்தானிகர் வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவுவழங்குவேன் என உறுதியளித்தார்.