ஒருகொடவத்தையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று (07) அதிகாலை தீ பரவியதாகவும், 05 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சாலையில் இலவங்கப்பட்டை மற்றும் கார்ட்போட் அட்டை போன்ற பொருட்கள் உள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.