இன்று (16) மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பு கொழும்பு கோட்டையில் உள்ள அரச மரத்திற்கு முன்பாக பல பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அமெரிக்க-இந்திய-ஐ.எம்.எஃப் வற்புறுத்தல், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், சைபர் பாதுகாப்பு சட்டம், எரிசக்தி சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு எதிராக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மனித சுதந்திரம் மற்றும் சுயாட்சியைப் பாதுகாக்கவும் போராட்டக்காரர்கள் அரசை வலியுறுத்தினர்.
சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன