நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் தேசிய மின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று (01) பிற்பகல் மீண்டும் செயலிழந்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதாகவும், 270 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு துண்டிக்கப்பட்டதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படுத்தப்படுவதால் மின்வெட்டு ஏற்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.