இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுப்பதில்லை

Date:

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. மேலும் வலியுறுத்தியதாவது,

இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் கடற்படையினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீன்வளங்கள் அழிந்துப்போவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் இல்லாதொழிக்கப்படுகிறது.

இதை தடுக்க வேண்டுமென நாம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். ஆனால், கடற்றொழில் அமைச்சும் அரசாங்கமும் இதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.

எமது மீனவர்கள் கடலுக்குச் சென்றால் அங்கு இந்திய இழுவைப்படகுகளும் அவர்களது வலைகளும் இருக்கின்றன. இதுதொடர்பில் கடற்றொழில் அமைச்சருக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவித்திருந்தேன்.

ஒருசில மீனவர்கள் கைதுசெய்யப்படுவதுடன், அவர்களது படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. கைதுசெய்யப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருதரப்பினரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும்.

இந்திய இழுவைப்படகுகளை எமது கடல் எல்லைக்குள் வராது தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்“ என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...