மின்கட்டண அதிகரிப்பு மக்களின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும் என எரிசக்தி ஆய்வாளர் கலாநிதி விதுர ரலபனாவ தெரிவித்தார்.
அதிகரித்துள்ள மின் கட்டணத் தொகையை செலுத்துவதற்கு மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளில் சிலவற்றை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மின்சார பாவனை குறையும் எனவும் கலாநிதி விதுர ரலபனாவ கூறினார்.
இவ்வருடத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.