புதைகுழிகளை சுத்தப்படுத்தி மாவீரர் தினத்தை கொண்டாட தயாராகி வரும் வன்னி மக்கள்

Date:

வன்னி தமிழ் மக்கள் தமது உறவுகள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை சுத்தப்படுத்தி மாவீரர் தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

முல்லைத்தீவு, விசுவமடுவில் அமைந்துள்ள தேராவில் புதைகுழியை சுத்தப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதை முன்னிட்டு சுத்தப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

7000 முன்னாள் போராளிகள் புதைக்கப்பட்ட தேராவில் மயானத்தில் முன்னெடுக்கப்பட்ட சுத்தப்படுத்தும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்துகொண்டிருந்தார்.

“தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை கௌரவிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது“ என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

“எமது தேசத்தின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் கனவுகள் நனவாகாவிட்டாலும், அவர்களை போற்றும் மற்றும் அவர்களின் தியாகங்களை தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

குறித்த புதைகுழியின் ஐந்து ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த முன்னாள் போராளிகள் புதைக்கப்பட்ட மைதானத்தில் இராணுவத்தினர் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவதாக குற்றம் சுமத்திய உறவினர்கள், தேராவில் புதைகுழிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...