மற்றுமொரு கட்டண திருத்தம்

0
139

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தேசிய அடையாள அட்டை ஒன்றின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் ரூபா 1,000 என தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சான்றளிப்பதற்கான கட்டணமாக ஆன்லைன் முறையின் மூலம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 25 ரூபாயும், பௌதீக ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் மூலம் சமர்ப்பிக்கும் போது 500 ரூபாயும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாயாக இருக்க வேண்டும். முன்பு கட்டணம் 10,000 ரூபாயாக இருந்தது.

பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணமான 2,000 ரூபாயை 3,000 ரூபாயாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டண திருத்தங்கள் அடங்கிய ஐந்து புதிய வர்த்தமானி அறிவித்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here