அனைத்து மின்சார ஊழியர்களும் கொழும்புக்கு அழைப்பு

0
179

அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து நாளை (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு, இலங்கை மின்சார சபை விற்பனை, சம்பள முரண்பாடு நீக்கப்படாமை போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

அதன்படி நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் இருந்து பெருமளவிலான ஊழியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here