ஹாமாஸிடம் பணையக் கைதியாக இருந்த இலங்கையர் மரணம்

0
139

பலஸ்தீனத்தில் இஸ்லாமிய போராளிக் குழுவான ஹமாஸால் பணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் உயிரிழந்துள்ளதாக டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவின் கூற்றுப்படி, 48 வயதான அவரது குழந்தைகளின் DNA மாதிரிகளை அடையாளம் தெரியாத உடலுடன் இணைத்ததன் பின்னர் இஸ்ரேல் காவல்துறையின் இன்டர்போல் பிரிவால் அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.

ஹமாஸ் போராளிகள் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய நகரங்களுக்குள் தாக்குதலைத் தொடுத்த ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் சுஜித் பண்டார யாதவார காணாமல் போயிருந்தார்.

பின்னர், பண்டாரவின் பிள்ளைகள் வழங்கிய DNA மாதிரிகள் மேலதிக விசாரணைகளுக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டன.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த பண்டார, 2015ஆம் ஆண்டு வேலை வாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார்.

மத சடங்குகள் மற்றும் பொது மரியாதையின் பின்னர் பண்டாரவின் உடல் கொழும்புக்கு அனுப்பப்படும் என்று இலங்கை தூதுவர் நிமல் பண்டார கூறியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீட்டுப் பணியாளராக பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுலா ஜயதிலக்கவின் சடலம் மீட்கப்பட்டு கடந்த வாரம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டமையும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here