நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 13) விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடுமுறைக்குப் பதிலாக நவம்பர் 18ஆம் திகதி (சனிக்கிழமை) பாடசாலைகள் நடைபெறும். இந்த சிறப்பு ஏற்பாடு குறித்து பாடசாலை அதிபர்களுக்கும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.