எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வெட் வரி 15% இல் இருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அது மின் கட்டணம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வற் வரி தற்காலிகமாகவே அமுலில் இருக்கும் என்பதால், அது பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.