நுவரெலியாவிலுள்ள இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை குத்தகைக்கு வழங்க அனுமதி

Date:

நுவரெலியா குயின் எலிசபெத் அவென்யூவில் அமைந்துள்ள பழைய இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை “Colonial Properties Private Limited” நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) சொந்தமான சொத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்து போட்டி முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான பேச்சுவார்த்தைக் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது.

அதன்படி, மேற்படி குழுவின் சிபாரிசுக்கு அமைவாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் மேற்படி சொத்தை Colonial Properties Private Limited நிறுவனத்திற்கு 50 வருட குத்தகை காலத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...