போதைப் பொருள் வியாபாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் சிவப்பு எச்சரிக்கை

Date:

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும் போதைப் பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒழிப்பதுவுமே தனது பணிப் பட்டியலில் முதன்மையானது என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட பின் கொழும்பு கங்காராம விகாரையில் இன்று (29) மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நானும் சுமார் 25 வருடங்களாக பொலிஸில் பல்வேறு பதவிகளை வகித்த ஒருவர். எனவே எங்களுக்கு அனுபவம் உள்ளது. இலங்கை மக்களின் நலனுக்காக இலங்கை பொலிஸ் சேவையை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். எனது முன்னுரிமைப் பட்டியலில் தேசிய பாதுகாப்பு தான் முதன்மையானது. இரண்டாவது முன்னுரிமை இந்த நாட்டில் போதைப்பொருள் இல்லாதொழிக்க வேண்டும். இன்று பாடசாலை மாணவர்களுக்கும் கிராமங்களுக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. போதைப்பொருள் எங்கும் உள்ளது. இது சம்பந்தமாக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. அதை செயல்படுத்துவேன். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களால் ஏற்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும் பார்க்கிறேன். மிரட்டி பணம் பறித்தல் போன்ற விடயங்கள். அவை எனது முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. என்னுடைய சேவையைப் பெற்றவர்களுக்கு நான் எப்படிச் செயல்பட்டேன் என்பது தெரியும். என்னுடன் பணிபுரிந்த அதிகாரிகளுக்கும் தெரியும். இப்போது அதை அவர்கள் என் செயல்களில் பார்க்க முடியும்.” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...