புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்த இளைஞர் கைது; அமைச்சருடன் பெற்றோர் சந்திப்பு

Date:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஆடை அணிந்திருந்தமையினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இளைஞனின் பெற்றோர்கள் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, அமைச்சரிடம் தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறியிருந்தார்.

இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், அச்சமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் அறிவுரை கூறினார்.

கடந்த 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வில், கொடிகாமத்தை சேர்ந்த யூட் சுரேஸ்குமார் தனுஜன் (வயது – 23) என்ற இளைஞன் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிச் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்தார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல்...

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...

மழை தொடரும்

நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,...