மூன்று முக்கிய மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்றியது பா.ஜ.க

0
157

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களில் அமோக வெற்றிபெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில், பாரதிய ஜனதா கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியை உறுதிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.

முன்னதாக காங்கிரஸின் ஆட்சியில் இருந்த ராஜஸ்தானில் இம்முறை பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றுள்ளமை சிறப்பு அம்சமாகும்.

எவ்வாறாயினும், தெலுங்கானா தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேர்தல் நடந்த மாநிலங்களில், மிசோரம் தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கட்சி தலைமையகத்தில் தொண்டர்களிடம் பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் உரையாற்றியுள்ளார்.

“சட்டமன்றத் தேர்தலில் இன்றைய வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. இது தன்னிறைவு பெற்ற இந்தியாவின் வெற்றி” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிவாரியாக நாட்டை பிளவுபடுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும் மோடி குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here