கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு மீட்பு

Date:

இன்று (06) காலை தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை பொலிஸ் டொமைன் இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை என்ற முகவரியில், பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள 11 மாடி கட்டிடத்தின் 5வது மாடியில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீல நிற பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு போன்ற ஒன்று இருப்பதாக தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு அதன் பாதுகாப்பு அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொலிஸாரின் விசாரணையில் அது கைக்குண்டு என தெரியவந்துள்ளது.

பின்னர், தெஹிவளை பொலிஸ் நிலையம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு எடுத்துச் செல்லப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலேசிய திருமுருகன் ஆலயத்தில் செந்தில் தொண்டமான் வழிபாடு

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும்...

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...