2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சற்றுமுன் நிறைவேற்றம்: ஆதரவாக 122 பேரும் எதிராக 81 பேரும் வாக்களிப்பு

Date:

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஒருவர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார்.

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான தர்க்கம் இடம்பெற்ற நிலையில் மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தது.

தேசிய மக்கள் சக்தியும் எதிராகவே வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பட்ஜெட்டுக்கு ஆதரவாகவே வாக்களித்தது.

அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க, பட்ஜெட்டுக்கு எதிராகவே வாக்களித்தார். வடிவேல் சுரேஷ் இரண்டாம் வாசிப்பை போன்று பட்ஜெட்டை ஆதரித்தே வாக்களித்தார்.

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

14ஆம் திகதிமுதல் 21ஆம் திகதி திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 25 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாக வாக்களித்தது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை எதிராக வாக்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 21ஆம் திகதிமுதல் டிசம்பர் 13ஆம் திகதிவரை மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...