மேலும் 6 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது

Date:

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு(13) முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையில், படகொன்றுடன் இந்திய மீனவர்கள் காரைநகர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 06 பேரும் நேற்று காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

06 பேரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இந்திய மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...