வடிவேல் சுரேஷ் எம்பிக்கு இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து

Date:

ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசிற்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மலையக மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என குடியுரிமை பறிக்கப்பட்டு நாடாற்ற சமூகமாக மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்ட போதிலும், இன்று நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசகராக மலையக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த மலையக மக்களுக்கும் பெருமையளிக்கும் விடயமாகும்.

வடிவேல் சுரேஷ் எம்பி தனது அரசியல் வாழ்க்கையை இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஆரம்பித்து, மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் பாசறையில் வளர்ந்து, மலையகத்தில் மிக முக்கியமான தொழிற்சங்கமான LJW யின் பொதுச் செயலாளராக இருந்து இன்று ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை தனது கடின உழைப்பிற்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக கருதப்படுகிறது.

மேலும் அவருடைய இப்பதவி காலத்தில் மலையக மக்களுக்கு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...