ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஜனாதிபதி அலுவலகத்தின் புதிய தலைமை அதிகாரியாக நிஹால் ரணசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தேசய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நிஹால் ரணசிங்க தற்போது கல்வி அமைச்சின் செயலாளராக பதவி வகிக்கின்றார். அதற்கு முன்னர், அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரலாக பணியாற்றிய அனுபவமிக்க நிர்வாக அதிகாரியாவார்.
ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.