யாழ் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி மழையால் பாதிப்பு

0
238

தென்னிந்தியாவின் சூப்பர் சிங்கர் ஹரிஹரன் உட்பட 11 பாடகர்கள் யாழ்ப்பாணத்தில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஹரிஹரன் குழு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக் கச்சேரியில் கலந்துகொள்வதற்காக இந்தக் குழுவினர் வந்திருந்த நிலையில், அடை மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று (17) கச்சேரியை ரத்து செய்ய ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

எனவே, ஹரிஹரன் உள்ளிட்டோரை தென்னிந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமானங்கள் மட்டுப்படுத்தப்பட்டதால், ஹரிஹரன் உள்ளிட்ட பாடகர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களும் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here