24 மணித்தியாளங்களில் 2,121 பேர் கைது

Date:

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களில் 12 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், 5 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 133 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்களும் இங்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகள் பின்வருமாறு,

ஹெராயின் 2 கிலோ 232 கிராம்
அஷிஸ் 769 கிராம்
கஞ்சா 178 கிலோ 916 கிராம்
ஏஸ் 35 கிலோ 89 கிராம்
மாவா 626 கிராம்
கஞ்சா செடிகள் – 30,550
போதை மாத்திரைகள் – 3,489

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...

அவசரநிலை சட்டம் மேலும் நீடிப்பு

நாட்டில் அமுலில் உள்ள பொதுமக்கள் அவசரநிலை சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட...