கடந்த ஆண்டு முதல் 1500 வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
மேலும் 5000க்கும் அதிகமானோர் வெளிநாடு செல்வதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது 40க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.