கட்டுநாயக்கவில் பிரித்தானிய பிரஜை கைது: துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்கள் பறிமுதல்

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் துப்பாக்கி, ‘ராம்போ’ கத்தி, 10 தோட்டாக்கள் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் 54 வயதான பார்க்கர் ரொபர்ட் மைக்கேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

லண்டன் நோக்கி பயணிக்கவிருந்த விமானத்தில் ஏறும் முன் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவை அனைத்தும் தனது பாட்டி அளித்த பரிசு என்று சந்தேகநபர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...