ஹவுதி போராளிகளின் தாக்குதல்களின் பின்னணியில் ஈரான்

Date:

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. செங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பது தெளிவாகி வருவதாகவும் ஹவுதி போராளிகள் கப்பல்களை தாக்குவதற்கு தேவையான ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் உளவுத்துறை தகவல்களை ஈரான் வழங்கி வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

“செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அங்கு உறுதியற்ற தன்மையை உருவாக்க ஹவுதி போராளிகளுக்கு ஈரான் எப்போதும் ஆதரவளித்து வருகிறது. தெளிவான புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறோம்’ என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக யேமனின் ஹூதி போராளிகள் செங்கடலில் முக்கிய கப்பல் வழித்தடங்களில் பயணிக்கும் அமெரிக்கா,இஸ்ரேல் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்கா அண்மையில் 10 நாடுகளின் கூட்டணியை உருவாக்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...

மலேசிய பிரதமர் அலுவலக இணை அமைச்சருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர்...

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...