இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு பாஜக -இதொகா இணைந்து முத்திரை வெளியிட்டு கௌரவம் !

0
202

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவர்களின் “உழைப்பை” அங்கீகரிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழிகாட்டலில், தமிழ்நாடு பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில், பாரதீய ஜனதாக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நினைவு அஞ்சல் முத்திரையை இன்று புதுடில்லியில் வெளியிட்டுள்ளார்.

இம்முத்திரையை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், விரகேசரி பத்திரிக்கையின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், GOPIO தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவி அனுசியா சிவராஜா, பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தாவிசாளர் ராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஸ்ட ஆலோசகர் மதியுகராஜா இ.தொ.காவின் உப தலைவர்களான சிவஞானம்,பிலிப் குமார்,அசோக் குமார், பாஸ்கர், பிரதி பொது செயலாளர் செல்லமுத்து உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here