Thursday, January 16, 2025

Latest Posts

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவிப்பு

வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்களும் 3 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 42 சதவீதம் அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் 3 வீதத்தால் மட்டுமே அதிகரிப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணைய வசதிகளுக்கு ஏற்கனவே 15 வீதம் வற் வரி அறவிடப்படுவதாகவும், புதிய வரித் திருத்தத்தின் கீழ் 3 வீதம் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் 42 வீதம் உயர்வடைந்துள்ளதாக போலியான செய்திகள் பரப்படுகின்றதாகவும் அதனை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.