பாராளுமன்றம் வரை சென்ற கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயல்! – வீடியோ

0
145

அம்பாறை – குறிஞ்சாகேனியில் தற்காலிக இரும்பு பாலத்தை பொருத்த 10 இலட்சம் ரூபா நிதியை விடுவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நன்றி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இந்த விவகாரம் தொடர்பில் உரையாற்றும் போதே எம்.எஸ்.தௌபீக் இவ்வாறு ஆளுநருக்கு நன்றி கூறினார்.

எம்.எஸ்.தௌபீக் எம்.பி மேலும் கூறியதாவது,

”கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் குறிஞ்சாகேனியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறிஞ்சாகேனி பாலம் உடைந்தது. இந்த பாலத்தை செப்பனிட்டு தருமாறு மக்கள் மத்தியில் எழுந்த கோரிக்கையை அடுத்து 2021ஆம் ஆண்டு குறித்த பாலத்தை புனரமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.

ஆனால், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதனை தொடர முடியாது போனது. இதேவேளை, தற்போது பாலத்தின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதனால் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. இப்பாலத்தை நிர்மாணிக்க நிதியை பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் நான் கோரிக்கையொன்றை முன்வைத்தேன்.

உடனடியாக குறித்த நிதியை விடுவிக்க ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு இந்த உயரிய சபையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here