தமிழரசு கட்சி தேர்தல் நாளை, இறுதி நேரத்தில் ஒரு போட்டியாளர் விடுத்த அதிர்ச்சி அறிவிப்பு

Date:

இலங்கை தமிழரசுக்கட்சியின் எனது அன்புக்குரிய பொதுச்சபை உறுப்பினர் அவர்களே! நான் சீனித்தம்பி யோகேஸ்வரன்.

வணக்கம் நாளை 21 ஆம் திகதி எங்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கான தலைவர் தேர்வுக்காக வாக்கெடுப்பு திருகோணமலையில் நடாத்தப்பட உள்ளது.

இவ்வாக்கெடுப்பில் பொதுச் சபை உறுப்பினரான தாங்கள் வாக்களிக்க உள்ளீர்கள். இந்நிலையில் தலைவர் போட்டியில் நானும் கலந்து கொள்கிறேன். ஆனாலும் இலங்கை தமிழரசுக்கட்சியில் தமிழ் தேசியத்தின் வெற்றிக்காகவும் தமிழ் பண்பாடுகளை அழிவுப்பாதையில் இருந்து காப்பதற்கு இன்றளவிலும் அயராது உழைக்கும் கட்சியாகும்.

இக்காட்சியில் தொடர்ந்தும் தமிழ் தேசியம் நிலைத்திருப்பதற்காக தமிழ் தேசியபற்றாளன் (கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்) சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.

நானும் தமிழ் தேசிய பற்றாளனாக இருந்தாலும் இன்று சர்வதேச மட்டத்திலும் நமது தமிழ் சமூகத்திலும் இன்றளவில் நற்பொயரும் சிறந்த செல்வாக்கும் பெற்றவராக (பாராளுமன்ற உறுப்பினர்) சிவஞானம் சிறிதரன் உள்ளார்.

ஆகவே தங்களது பொன்னான வாக்குகளை (கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்) சி.சிறிதரன் அவர்களுக்கு வழங்கி தமிழ் தேசியத்தை அழிவுப்பாதையில் இருந்து காத்து என்றும் எமது கட்சியில் தமிழ் தேசிய பண்பாடுகளை நிலைத்திருக்க உதவுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.

எனக்கு எவ்விதத்திலும் நாளை நடக்கும் இத்தலைவர் தெரிவில் தங்களது வாக்குகளை வழங்க வேண்டாம் எனவும் அன்பாக கூறுகின்றேன்.

நன்றி. சீனித்தம்பி யோகேஸ்வரன்இலங்கை தமிழரசுக்கட்சி (தலைவர் பதவிக்காக வேட்பாளர்களில் ஒருவர்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...