கொஸ்கொட சுஜீ, தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் ‘றோயல் பீச் சமன்’ மீது தாக்குதல் நடத்துவதற்கு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான உரகஹா மைக்கேலுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
அதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுஜியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான புஸ்ஸே ஹர்ஷவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ரோயல் பீச் சமன் அண்மையில் கொல்லப்பட்டார்.
‘யுக்திய’ நடவடிக்கையுடன் இணைந்ததாக காலியில் கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையின் போது விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
ரோயல் பீச் சமன் உள்ளிட்ட ஐவரை சுட்டுக் கொன்றதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் காலி, மாகல்ல மற்றும் சிவவல பிரதேசத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்போது துபாய் நாட்டில் பதுங்கியிருக்கும் கொஸ்கொட சுஜி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியே அவர்களைக் கொன்றது தெரியவந்தது.
9 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படைத் தளபதி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (மௌபிம)